விளையாட்டு

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்..!

e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeaae0af8d e0aeaae0aeafe0aebfe0aeb1e0af8de0ae9ae0aebfe0aeafe0aebee0aeb3e0aeb0e0af8d e0aeaae0aea4e0aeb5 | Pathivu News

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28.02.2026) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும்.

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை.

பதவி விலகல் தீர்மானம் குறித்து ‘ pathivunews.com’ விடுத்த வினவலுக்குப் பதிலளித்த அவர், தனது தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தக் காலம் மேலும் எஞ்சியிருந்த போதிலும், அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

2024 ஜூலை மாதம் இந்தியாவிற்கு எதிரான தொடரின் போது இடைக்காலப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளன.

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp