Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்ஊழலுக்கு எதிராக அரசு போராடும் என சர்வதேச நாணயநிதியதிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

ஊழலுக்கு எதிராக அரசு போராடும் என சர்வதேச நாணயநிதியதிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் மனநிலையினை சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உழைக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியம் அதற்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என உறுதியளித்த அவர் சிறுவர் வறுமை,போசாக்கின்மை போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்; எனவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments