முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

மொரட்டுவை கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு..!

கொழும்பு – மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம், பெண்ணின் மரணம் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தனிப்பட்ட கோபத்தினால் இந்த மரணம் நிகழ்ந்ததா அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp