உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் வணிகம்

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும்..!

e0aea4e0aeaae0aebee0aeb2e0af8d e0aea4e0aebfe0aea3e0af88e0ae95e0af8de0ae95e0aeb3e0aeaee0af8d e0ae87e0aea8e0af8de0aea4 e0aeb5e0aeb0 | Pathivu News

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

5.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் அலுவலகத்தை நேற்று (22) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருடம் தபால் திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 13,450 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இந்த வருடம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தபால் சேவையை நவீனமயமாக்குவதற்காக, மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு 209 பாதுகாப்பு கேமராக்களை கொள்வனவு செய்ய 27 மில்லியன் ரூபாவும், 225 கணினிகளுக்காக 74 மில்லியன் ரூபாவும், 1,500 டெப் கணினிகளை கொள்வனவு செய்ய 101 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பொலன்னறுவை, மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் தலைமையகம் ஆகியவற்றில் 24 மில்லியன் ரூபாய் செலவில் சூரிய சக்தி உற்பத்தி அமைப்புகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை தபால் தொகுதியில் அந்தப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 31 மில்லியன் ரூபாய் செலவில் தபால் அலுவலகங்களுக்கு 657 விரல் அடையாள இயந்திரங்களை கொள்வனவு செய்யவும் தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
e0aeaae0aebfe0aea3e0af88e0ae95e0aeb3e0af8d e0aeaee0aeb1e0af8de0aeb1e0af81e0aeaee0af8d e0aeaae0aeb0e0aebfe0aeb5e0aeb0e0af8de0aea4e0af8d | Pathivu News
வணிகம்

பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பேராசிரியர்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp