உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

நாக தேவியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீடு..!

நாக தேவியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீட்டு விழா பருத்தித்துறை பன்னையம்பதி நாகபூசணி அம்மன் ஆலய தர்மகர்த்தா ஜெயாநத்தம் ஜெயகோபி தலமையில் நேற்று(15.02.2026) பிற்பகல் 8:00 மணியளவில் படுத்தித்துறை பன்னையம்பதி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு வெளியீட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதில் ஆசி உரையினை பன்னயம்பதி நாக பூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ பாலத்தீஸ்வர குருக்கள் நிகழ்தினார்.

வாழ்த்துரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் கரவெட்டி கோட்ட கல்வி அதிகாரியும் பரம்பரை சுதேச வைத்தியருமான கதிர்காமு யோகநாதன், உடுதுறை மகா வித்தியாலய ஆசிரியர் க. தயாளன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இறுவெட்டினை திருமதி ஜெயகோபி வெளியிட்டு வைக்க நிகழ்வின் பிரதம விருந்தினர் பரம்பரை வைத்தியர் கதிர்காமு யோகநாதன், பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மந்திகை மக்கள் வங்கி முகமையாளர் s அரவிந்தன், j. 407 கிராம அலுவலர் வி. சதுர்த்திகா, ஜன நாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், இசைகோயில் வெளியீட்டக தலைவர் பொன். சக்திவேல், கலாபூசணம் கலை பருதி மா. ஜெயானந்தம் ஆச்சாரி, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், உபதவிசாளர், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், பன்னையம்பதி அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

வெளியீடு செய்யப்பட்ட 3 பாடலுக்குமான வரிகளை சி. சக்திவேல், v. J நிதர்சன், ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்களை அனுஷ்கா, சுலக்சன், சி சக்திவேல் ஆகியோர் பாடியிருந்தனர்.
இசையை erin பிரஷாத் வழங்கியிருந்தார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp