செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை வழிபாடு..!

திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் நான்கு ஜாம பூசைகள் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் முதல் ஜாம பூசைகள் பி.ப 8.00 மணியளவில் பஜனை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் இந்தியாவின் திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் இடம்பெற்றது.

இதன் போது பூசையில் கலந்து கொண்ட பொது மக்களின் திருக்கரங்களினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடும் பாக்கியம் கிடைக்கப்பெற்றதுடன், ராமகிருஸ்ண மிஷன் இல்ல மாணவர்களினால் சிவ நடனம் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்