சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் 5,500 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
இன்று (ஜனவரி 29) காலை வர்த்தக நேரத்தில் இந்த அதிரடி உயர்வு பதிவாகியது.
அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, அமெரிக்கா-ஈரான் இடையிலான சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
