உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உலக பொருளாதார மன்றத்தின் உயர்மட்ட சந்திப்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய

e0ae89e0aeb2e0ae95 e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0aebee0aea4e0aebee0aeb0 e0aeaee0aea9e0af8de0aeb1e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d | Pathivu News

உலக பொருளாதார மாநாடு நடைபெறும் டாவோஸ் நகரில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டாவை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு உலக பொருளாதார மாநாடு நடைபெறும் சுவிட்சர்லாந்தின் காங்கிரஸ் மையத்தில் இடம்பெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ்–க்லோஸ்டர்ஸ் நகரில் நடைபெறும் 56வது உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கின்றது.

பிரதமரையும் அவரது குழுவினரையும் சூரிச் விமான நிலையத்தில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியும் தூதுவருமான ஹிமாலி அருணதிலகா வரவேற்றார்.

‘உரையாடலின் உணர்வு’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு உலக பொருளாதார மாநாட்டின்; முக்கிய அமர்வுகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் தொடர்கின்றன.

இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்க பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சுமார் 3,000 உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சர்வதேச தலைவர்கள், உலக அமைப்புகளின் பிரதானிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பல உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp