பூசா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை பிற சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்ததாவது, நேற்று மாலை பூசா சிறைச்சாலையின் டி பிரிவின் கூரையின் மீது ஏறிய கைதிகள் குழு ஒன்று, சிறை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன்போது சிறைச்சாலை சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
சிறை அதிகாரிகளும் பொலீஸாரும் தலையிட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார்.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை இனி பூசா சிறைச்சாலையில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றி இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒ
