உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிலை வைத்து சிக்கிய பிக்கு சாமியர் – திருகோணமலையில் சட்டம் கேட்ட கேள்வி”

“திருகோணமலை போதிராஜ விஹாரத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பௌத்த பிக்குகள்”

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மேலும் ஐந்து பேர் என மொத்தம் 9 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி திருகோணமலை போதிராஜ விஹார வளாகத்தில் கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தை மீறி அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையை அகற்ற அதிகாரிகள் முயன்றபோது, பௌத்த பிக்குகளும் அப்பகுதி மக்களும் அதற்கு எதிர்ப்பு வெளியிடடதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலை அமைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp