உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்
பொது பாதுகாப்பு அமைச்சின் இணையதள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக CID விசாரணை ஆரம்பம்

பொது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் மீண்டும் மீண்டும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அமைச்சின் இணையதளத்தில் காணப்பட்ட அரசின் தேசியச் சின்னம் தெளிவற்ற நிலையில் இருந்ததாகவும், அதனால் இணையதளம் வெளிநாட்டு தரப்பினரால் பல தடவைகள் அணுகப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இணையதளம் மீளச் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சீரமைப்பு பணிகள் இலங்கை கணினி அவசர நடவடிக்கை குழு மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் இணைந்த முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செயலாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அமைச்சு மட்டத்திலான உள்நாட்டு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp