உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய நிதியுதவியுடன் வடக்கு ரயில்வே பாதை முழுமையாக மறுசீரமைப்பு – 19 முதல் ரயில் சேவைகள் கட்டுப்பாடு

இந்திய நிதியுதவியுடன் இலங்கையின் வடக்கு ரயில்வே பாதையில் மேற்கொள்ளப்படும் முழுமையான மறுசீரமைப்பு பணிகள்

இந்திய நிதியுதவியின் கீழ் இலங்கையின வடக்கு ரயில்வே பாதையின் முழுமையான மறுசீரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

‘டிட்வா’ சூறாவளி காரணமாக ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதங்களை சரிசெய்யும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக இந்திய அரசின் நிதியுதவியிருந்து சுமார் 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் காரணமாக, எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் குருநாகல் மாவட்ட மாகோ சந்தியிலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட முறையில் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்