இதற்கமைய, சிவில் விமான சேவைகள் ஆணைக்குழு ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் விதமான சட்டவடிவமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சிவில் விமான சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், 250 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுடைய அனைத்து ட்ரோன்களும், வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என கூறினார்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் இவ்வருடத்திலிருந்து கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாகவும், அதேவேளை 250 கிராமுக்கு குறைவான எடையுடைய பொம்மை ட்ரோன்களுக்கு இந்த ஒழுங்குமுறைகள் பொருந்தாது எனவும் அவர் விளக்கினார்.
