அல் மீஸான் பௌண்ட்ஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத் துறையில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் ‘லீடர் கிளாஸ்டர் ஹீரோஸ் – இரண்டாம் சீசன்’ நிகழ்வு சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. கல்வி முன்னேற்றம், தலைமைத்துவ திறன், சமூக பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்க வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம்.
கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரைகளை வழங்கினர்.
அல் மீஸான் பௌண்ட்ஷன் ஸ்ரீலங்கா எதிர்கால தலைமுறையை திறமையான, ஒழுக்கமுள்ள சமூகத் தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

