உள்ளூர் செய்திகள்

அரசுக்கு எதிராக ஒன்றிணையுமாறு நாமல் அறை கூவல்

அரசாங்கத்துக்கு எதிராக, பரந்த அளவிலான ஒன்றுபட்ட எதிர்க்கட்சிக் கூட்டணி அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான ஒரே நடைமுறை வழி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியே என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஒற்றுமை இல்லாவிட்டால் நாடு பலவீனமடையும் என்ற தனது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கருத்தையும் நாமல் ராஜபக்ஸ இங்கு நினைவூட்டினார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் வரவேற்றுள்ளார்.

இரு கட்சிகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றும், எனினும் அவர்களுக்கிடையிலான உள்கட்சிக் கலந்துரையாடல்களில் தாம் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் நாமல் ராஜபக்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஒன்றிணைவு முயற்சி, எதிர்க்கட்சித் தரப்பில் அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்