விளையாட்டு

மீண்டு ஓய்வு பெறும் சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடருக்குப் பிறகு தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்தார்.

தனது ஒப்பந்த காலம் இன்னும் பல காலம் இருக்கும் போதிலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் தொடர விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

சனத் ஜயசூரிய கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை இந்தியாவுடனான தொடரின் போது இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டு, அந்த ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவி ஏற்றார்.

அவர் தலைமை வகித்த காலத்தில், இலங்கை அணி 60 போட்டிகளில் விளையாடி, அதில் 29 வெற்றிகள், 29 தோல்விகள் மற்றும் 2 போட்டிகள் வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய