உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய பாடத்திட்டம் 21 மற்றும் 29 ம் திகதிகளில் அப்பியாசப்படுத்தப்படும்

புதிய கல்வி ஆண்டு நாளை தொடங்கும் நிலையில், தரம் 1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து, தரம் 6 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் இன்று அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.

பிரதமர் கூறியதாவது, புதிய கல்வி முறைக்கு மாணவர்களை பழக்கப்படுத்தும் திட்டங்களும், பெற்றோர்களுக்கு இதைப் பற்றி அறிமுகம் அளிக்கும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, இதுவரை 132,580 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

இதில் 93 சதவீதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்