ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று சிட்னியில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்i தேர்வு செய்தது.
தொடக்கத்தில் ஜாக் கிராலி 16, பென் டக்கெட் 27, ஜேக்கப் பெத்தேல் 10 ஓட்டங்கள் செய்து விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 57 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்தது.
அதன்பின் நடச்சத்திர வீரர் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இணைந்து களத்தில் நிலைத்தனர். இருவரும் அரைசதத்தை கடந்து, 4வது விக்கெட் கூட்டாக 154 ஓட்டஙகள் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை எடுத்தது. வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஜோ ரூட் 72ஓட்டங்களுடன்;, ஹாரி ப்ரூக் 78 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
அஸ்திரேலியா சார்பில் மிச்சல் ஸ்டார்க், மைகேல் நேசர் மற்றும் ஸ்காட் போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

