வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்துஇ ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைகள் வெனிசுலா மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னாள் ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில்இ இந்த சேவையை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் நீண்ட காலமாக அரசியல் கட்டுப்பாடுகள்இ இணைய துண்டிப்புகள் மற்றும் மந்தமான இணைய வேகம் நிலவி வருவதால்இ ஸ்டார்லிங்கின் இந்த தீர்மானம் மிக முக்கியமானதாக இருக்கிறது.
இதற்கிடையில்இ கரீபியன் வான்வெளியில் விமானப் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கை அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் ஷான் டஃபி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தாக்குதல்களால் வெனிசுலாவில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்இ இதில் பொதுமக்கள்இ இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரும் அடங்குகின்றனர்.
மேலும்இ பல அதிகாரிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்இ காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
