கனடா செய்திகள்

ரொறன்ரோவில் வாகன கொள்ளையுடன் தொடர்புடைய கும்பல் கைது!

ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தை அண்டிய பகுதியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த வாகன கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த வாகன கொள்ளை கும்பல் சுமார் நூறு வாகனங்களை கொள்ளை இட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்த வாகன கொள்ளை சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் நான்கு மில்லியன் தொடர் பெறுமதியான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கியூபைக்கை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>கியூபெக்கில் மது போதையில் வாகனம் செலுத்திய பலர் கைது!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்