யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை ; வீடின்றி வாழ்ந்து வரும் 2,500 குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிய வீடுகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தாhர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று யாழ்ப்பாணம், சாவகச்சேரி அருகே உள்ள மீசாலை கிராமத்தில் 2026 தேசிய வீட்டு நிர்மாணத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
தமக்கென ஓர இடம் – அழகான வாழ்க்கை’ என்ற முன்னோக்கிய தலைப்பில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டெங்கும் மொத்தம் 31,218 வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளது.

