உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் கொடிகாமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோசமான செயல்..!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புதன்கிழமை (11.03.2026) அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கொடிகாமம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை