செய்திகள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 13ம், 14ம், பாடசாலைகளுக்கு விடுமுறை.

 

அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு இவ்வாறு தீர்மானிக்க்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18ஆம் திகதி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்களிப்பு நிலையங்களுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12.11.2024 அன்று பாடசாலை நேரத்திற்குப் பின் சம்பந்தப்பட்ட கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்கு தேவையான தளபாடங்களை கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்