உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது

e0aeaae0aeb2e0af8de0ae95e0aeb2e0af88e0ae95e0af8de0ae95e0aeb4e0ae95e0ae99e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae87e0aea9 | Pathivu News

பல்கலைக்கழகங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அங்கீகரித்தார்.
பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் தகவலின்படி, 1978ஆம் ஆண்டின் எண் 16 பல்கலைக்கழகச் சட்டத்தை திருத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இச் சட்டமூலமானது, திருத்தங்களுடன் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு கடந்த 2025 நவம்பர் 21ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், 2025 டிசம்பர் 03ஆம் திகதி பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முனைவு கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் முதற் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் நோக்கங்களுள், சம்பந்தப்பட்ட பீடத்தின் சிரேஸ்ட்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஸட்ட விரிவுரையாளர்கள் ஆகியோரில் ஒருவரை பல்கலைப்பீட சபை மூலம் தேர்ந்தெடுக்க அனுமதி வழங்கப்படுவது அடங்கும்.

அதேவேளை, பீடாதிபதியின்; பதவிக்காலம் முடிவடையும் முன்பே அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு சபைக்கு அதிகாரம் வழங்கப்படுவதுடன், பீடாதிபதியின் பதவிக்காலத்திற்கான வரம்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மேலும், கல்விப் துறை தலைவரை நியமிக்கும் போது சபை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன. அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே துறை தலைவரை நீக்குவதற்கான அதிகாரமும் சபைக்கு வழங்கப்படுவதுடன், அந்தப் பதவிக்காலத்திற்கான வரம்புகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.

 

இதனடிப்படையில், பல்கலைக்கழகங்கள் திருத்தப்பட்ட சட்டமூலம் மசோதா 2026ஆம் ஆண்டின் எண் 2 பல்கலைக்கழகங்கள் சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp