உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திட்டங்கள் ஆயிரம்; தீர்வு கிடைக்குமா இந்நேரம்? – கிளிநொச்சியில் அதிகாரிகள் பட்டாளம்!

e0aea4e0aebfe0ae9fe0af8de0ae9fe0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0ae86e0aeafe0aebfe0aeb0e0aeaee0af8d e0aea4e0af80e0aeb0e0af8de0aeb5 | Pathivu News

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பாக வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் தொடர்பாகவும், சமூக சக்தி நிதி ஒதுக்கீடுகள், மீள்குடியேற்ற வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆரயப்படவுள்ளன.
யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் காணி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp