செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பொது நூலக நிறுவுநர் கே.எம்.செல்லப்பாவின் 130 ஆவது அகவை தினம்..!

e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaae0af8ae0aea4e0af81 e0aea8e0af82e0aeb2e0ae95 e0aea8e0aebfe0aeb1e0af81e0aeb5e0af81e0aea8e0aeb0e0af8d | Pathivu News

யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்று (24.02.2026) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர், கே.எம்.செல்லப்பாவின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தூர் செல்லப்பா என அழைக்கப்படும் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா,1933 ஆம் ஆண்டில் புத்தூரில் தன்னிடமிருந்த நூல்களைக்கொண்டு சிறியதொரு நூலகத்தை ஆரம்பித்தார்.

அதன்பின்னார், 1934 ஆண்டு ஆனி மாதம் பொது நூலகம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டது.

அதற்காக, தன்னிடமிருந்த நூல்களையும், பலரிடமும் சேர்த்த ஆயிரத்து 184 ரூபா 22 சதம் பணத்தையும் வழங்கினார்.

பின்னர் யாழ்.வைத்தியசாலை அருகில் வாடகை வீட்டில் 844 நூல்களுடனும், 34 பருவ இதழ்களுடனும் நூலகம் இயங்கியது.

1935 இல் யாழ்.பட்டினசபை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வாடி வீட்டிற்கு நூலகம் மாற்றப்பட்டது.

அதன்பின்னர் 1953 ஆம் ஆண்டில் தற்போதுள்ள இடத்தில், திராவிட கலையம்சம் பொருந்திய அறிவுக்கோயிலாக அமைக்கப்பட்டது.

கே.எம் .செல்லப்பா 1896 ஆம் ஆண்டு மாசி மாதம் 24 ஆம் திகதி பிறந்தார்.

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணியாற்றியதோடு, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையாளராகவும் திகழ்ந்தார்.

ஆசியாவின் பெரும் நூலகத்தை வழங்கிய கே.எம்.செல்லப்பா, 1958 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 24 ஆம் திகதி சாவடைந்தார்.

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp