உலகம் உள்ளூர் செய்திகள்

உலகம் முழுவதும் வட்ஸ்அப், முகப்புத்தகம் உள்ளிட்ட மெட்டா சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.

அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து ஏராளமான பயனர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.


அதில், ‘தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது.

 

இதையும் படியுங்கள்>விசர் டாக்குத்தர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றில் பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர்

 

https://x.com/hashtag/meta?src=hashtag_click

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp