உள்ளூர்

இராணுவம், கடற்படை அபகரித்த காணிகளிலிருந்து வெளியேற கோரி போராட்டம், ஜனநாயக தமிழதேசிய கூட்டமைப்பு ஆதரவு..!

e0ae87e0aeb0e0aebee0aea3e0af81e0aeb5e0aeaee0af8d e0ae95e0ae9fe0aeb1e0af8de0aeaae0ae9fe0af88 e0ae85e0aeaae0ae95e0aeb0e0aebfe0aea4 | Pathivu News
இராணுவம் மற்றும் கடற்படை ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி எதிர்வரும் 11.09.2026வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை நகரசபையால் நடாத்தப்படவுள்ள கவனயீர்ப்புப் பேரணிக்கு நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்து இன்றையதினம் தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியுள்ளார்.
அவர் அதில் குறிப்பிட்டதாவது.
பருத்தித்துறை நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான தபால் திணைக்களம், நீதிமன்றம், நகர சபை ஆகியவற்றிற்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரையும், சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான கடற்படை வெளிச்ச வீடு கடற்படை முகாமிலிருந்ததும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி கண்டனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி, எதிர் வரும் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும். அங்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவதற்காகப் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப் படவுள்ளது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பருத்தித்துறை நகர சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் npp தவிர்ந்த அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, எமது நகரின் பூர்வீக நிலங்களை மீட்டெடுக்கும் இந்த பேரணியில் பருத்தித்துறை மக்கள் அனைவரும் பெருந்திரளாக அணிதிரண்டு தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்குமாறு பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊