உள்ளூர் செய்திகள்

இன்று இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி அநுர!

e0ae87e0aea9e0af8de0aeb1e0af81 e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aebe e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb2e0aeb5e0af81e0aeb3e0af8de0aeb3 | Pathivu News

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகின்றார்.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பினையேற்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 17ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டெல்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp