2025 ஆம் ஆண்டில் அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிக மருந்துத் தயாரிப்பை பதிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் மொத்தமாக 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் கெப்ஸ்யூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்கள் பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அனைத்து மருந்து வேண்டுகோள்களும் எந்தவித பற்றாக்குறையும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
