உலகம்

அமெரிக்க தேர்தல் விதிகளில் மாற்றம் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு அதிர்ச்சியளித்த ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

புதிய விதிமுறைகள் வாக்காளர்கள் வாக்கு செலுத்த என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், தேர்தல் நாளில் அனைவருக்கும் வாக்குச்சீட்டுகள் கிடைப்பது உறுதி செய்வது என பல விடயங்களை மாற்றும் வகையில் உள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள உத்தரவில், தேர்தல் விவகாரங்களில் அமெரிக்கா அடிப்படை மற்றும் அத்தியாவசிய பாதுகாப்பை நடைமுறைப்படுத்த தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த உத்தரவு வாக்காளர் பட்டியலை பகிர்வதில் மாகாணங்கள் ஃபெடரல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளது.

புதிய உத்தரவை அமல்படுத்த மறுக்கும் மாகாணங்களுக்கு நிதி வழங்கப்படாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் தேர்தல் விதிமுறைகளை பொருத்தவரை மாகாணங்களுக்கு அதிகாரம் அதிகம் என்பதால், ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்து இருக்கும் புதிய உத்தரவை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp