உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அதிகாரப் பிடியில் நீதித்துறை: அலறும் எதிர்க்கட்சிக் கூட்டணி!

‘நாட்டில் நீதித்துறையின் சுதந்திரத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கட்டுப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிக் கூட்டணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை, நீதி அமைச்சகத்தின் மேலதிக செயலாளராக நியமித்திருப்பதே இந்தப் புதிய சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த நியமனமானது நீதித்துறையில் ஜனாதிபதியின் நேரடித் தலையீடு என்று விமர்சித்தார்.

அமைச்சகப் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி முன்னிலையில், நீதிமன்றங்கள் எவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்டமா அதிபருக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள், தணக்காளர் நாயகம் நியமனத்தில் நிலவும் தாமதம் மற்றும் நீதிபதிகளின் பதவி உயர்வு விவகாரங்கள் என அடுக்கடுக்கான முறைப்பாடுகளை அவர் முன்வைத்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆலோசித்திருப்பதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து இதற்கு எதிராகப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்