உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது பொலிஸார் தாக்குதல்..!

யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதிக்கு நேற்றைய தினம் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்று , அங்கு சமைத்து உணவுண்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது பருத்தித்துறை பகுதியில் இருந்து மணற்காட்டுக்கு சுற்றுலா சென்ற குழு ஒன்றுடன் தர்க்கப்பட்டு , இரு குழுக்களுக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் போதையில் இருந்த பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளான இருவர் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பொலிஸார் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றமை தொடர்பில் , பொது இடமொன்றில் மேலாடைகள் அற்ற நிலையில் , நிறை போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டமை தொடர்பிலும் பொலிஸ் திணைக்கள ரீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

காணொளி ஆதாரம்: https://www.facebook.com/share/v/1Hv7pmKfas/

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்