உள்ளூர் செய்திகள்

WhatsApp ஊடாக ஹெரோயின் விற்பனை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

பண்டாரவளை நகரில் வட்ஸ்எப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்கள் கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில் தங்கியுள்ள வெலிமடை அம்பகஸ்தோவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரவளை நகரிலுள்ள வாடகை வீட்டில், பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடந்தியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் ஹெரோயினை சிறிய பக்கட்களில் பொதி செய்து கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும், அதன் போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வெளிநாட்டில் உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்> கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது

 

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp