Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது

கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தாயை தூக்கில் இருந்து மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளார்.

குறித்த உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது போதையில் இருந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments