உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!

பனாமுறை, வேஅதுர பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (05.04.2026) இரவு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவர் அவரை தாக்கியதுடன், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பனாமுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp