தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் முதல் நாள் இன்றைய தினம் (15.09.2026) திருகோணமலை சிவன் கோவிலடியில் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் மிக உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வின் முதலில் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்துக்கான மலர்மாலையினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான சங்கத்தின் தலைவி செ.தேவி அவர்கள் அணிவிக்க ஈகைச் சுடரினை அகம் மனிதவள நிலையத்தைச் சேர்ந்த க.லவன் அவர்களும் தமிழர் பேரவையின் ஸ்தாபகர் ராம் நிக்கலஸ் அவர்களும் ஏற்ற பொதுச் சுடரினை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கமும் மலரஞ்சலியும் நடைபெற்றதோடு தொடர்ச்சியாக 26 ஆம் திகதி வரை இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


