திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று (08.04.2026) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -06, ஆர்.பி.ஜி.குண்டு -01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயழிலக்க செய்வதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
