doctor attacked | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நோயாளியால் பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை..!

  • Apr 15, 2026 - 04:35 PM
  • 0 Comments

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார். பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார். அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். […]

mannar red cross | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்து போராட்டம்..!

  • Apr 15, 2026 - 04:26 PM
  • 0 Comments

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்று (15) காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து தன்னார்வ பணியாளர்களாக 50 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேவையாற்றி வந்துள்ளனர். இதுவரை காலமும் செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையின் அங்கத்தவர்களாக தம்மை இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்த போதிலும் எந்தவொரு நிர்வாகமும் தங்களுடைய […]

tamil youth 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் ..!

  • Apr 15, 2026 - 09:40 AM
  • 0 Comments

பல்வேறு தரப்பினர் கண்டனம் வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை பொலிஸார் ஒரு இளைஞரை கால்களால் எட்டி உதைத்தும், பாதுகாப்பு அங்கிகளைப் பயன்படுத்தியும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை […]

mullaitivu illegal | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு சட்டவிரோத உப்பள விவகாரம் ; எம்.ஏ.சுமந்திரனின் அதிரடி..!

  • Apr 13, 2026 - 04:54 PM
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், குஞ்சுக்கால்வெளிப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை மகாவலி அதிகாரசபை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புசெய்து பெரும்பான்மை இனத்தவருக்கு உப்பளம் அமைப்பதற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்த மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பள விவகாரம் தொடர்பில் சுமந்திரன் கேட்டறிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து […]

education college tamil style | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி வெளியானது..!

  • Apr 13, 2026 - 04:41 PM
  • 0 Comments

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் […]

fuel price rise | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் உயரும் மசகு எண்ணெய் விலை..!

  • Apr 13, 2026 - 09:57 AM
  • 0 Comments

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 7% அதிகரித்து, அதன் புதிய விலை 102 டொலர்களாகக் காணப்படுகிறது. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் விலை 8% […]

passenger update | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்றைய தினமும் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான பேருந்துகள் சேவையில்..!

  • Apr 13, 2026 - 09:53 AM
  • 0 Comments

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13.04.2026) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நேற்று (12) மாலை முதல் குறைவடைந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார். கடந்த சில நாட்களில் வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. இன்றைய தினமும் பயணிகளின் […]

sl q1 2026 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் 2026 ன் முதல் காலாண்டில் வரி வருமானம் 606 பில்லியன்..

  • Apr 10, 2026 - 03:27 PM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 606,002 மில்லியன் ரூபாய் வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத வளர்ச்சியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த வருமானத்திற்கு வருமான வரி, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT),சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி உட்பட அனைத்து வரிகளும் பங்களிப்பு செய்துள்ளன. 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கு வைக்கப்பட்ட வரி வருமானத்தில் 25 சதவீதத்தை முதல் […]

before new year | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் விற்பனை சந்தை..!

  • Apr 10, 2026 - 03:03 PM
  • 0 Comments

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்றலில் இன்றைய தினம்(10.04.2026) காலை 9:30 மணியளவில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விற்பனை சந்தை ஒன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விற்பனை சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி சார் பொருட்களை சந்தைப்படுத்தினர் மற்றும் மரக்கறி வகைகள் மற்றும் ஆடைகள் மெழுகுதிரி சார் உற்பத்திகள் சந்தைப்படுத்தப்பட்டது மற்றும் இவ் சந்தையினை வடமராட்சி கிழக்கு பிரதேச உப செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர் […]

battaramulla incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்..!

  • Apr 10, 2026 - 12:48 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக பொல்துவ சந்திப்பகுதியில் இருந்து பாராளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp