e0ae8ee0aeb2e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeafe0af8de0ae9ae0af8de0ae9ae0aeb2e0aebee0aeb2e0af8d e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8a | Pathivu News செய்திகள்

எலிக்காய்ச்சலால் கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு!

  • Jan 6, 2025 - 05:10 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணியால் இருவர் உயிரிழந்திருக்கலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எனவே மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

e0ae85e0aeb0e0ae9a e0ae95e0aeb0e0af81e0aeae e0aeaee0af8ae0aeb4e0aebfe0ae95e0aeb3e0af8d e0ae86e0aea3e0af88e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News செய்திகள்

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்களவர் நியமனம்

  • Jan 6, 2025 - 03:48 PM
  • 0 Comments

ஜனாதிபதியால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.  

e0ae9ce0af86e0aea9e0aebfe0aeb5e0aebe e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0ae9ae0af8de0ae9ae0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

ஜெனிவா குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழு நியமிக்கப்படவுள்ளது

  • Jan 5, 2025 - 06:50 PM
  • 0 Comments

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிகப்பதற்கு விசேட குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜேவிபி அரசு […]

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0aeaee0aebee0aea8e0ae95e0aeb0 e0ae9ae0aeaae0af88e0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு, மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

  • Jan 2, 2025 - 11:02 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் புதிய ஆணையாளர் என்.தனஞ்சயன் மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.. அதனைத் தொடர்ந்து புதிய ஆணையாளர் என்.தனஞ்சயன் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் 2025 புதிய வருட கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், […]

e0aeaee0aea4e0af81e0aeaae0af8be0aea4e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebee0ae95e0aea9e0aeaee0af8d e0ae9ae0af86e0aeb2e0af81e0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

  • Jan 2, 2025 - 01:49 AM
  • 0 Comments

நேற்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட உட்பட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் இதன்போது, போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சட்டம் அமுல்படுத்தப்பட்ட சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 ஆகும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. […]

e0aea8e0aebee0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaae0aebfe0aeb0e0aebfe0aeb5e0aebfe0aea9e0af88e0aeb5e0aebee0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல – இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்!

  • Jan 1, 2025 - 02:36 AM
  • 0 Comments

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் தெரிவித்தார். யாழில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மட்டும்தான் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்ற கருத்து இருப்பதால் […]

e0ae87e0aeb2e0aeb5e0ae9ae0aeaee0aebee0ae95 e0aeaae0aeafe0aea3e0aebfe0ae95e0af8de0ae95 e0ae85e0aea9e0af81e0aeaee0aea4e0aebfe0aeafe0aeb3 | Pathivu News செய்திகள்

இலவசமாக பயணிக்க அனுமதியளித்ததால் தொடரூந்து, பேரூந்துக்கு 7கோடி நட்டம்.

  • Dec 29, 2024 - 09:06 AM
  • 0 Comments

இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கக் கூடிய வகையில் 08 தொழிற்சங்கங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகளை வழங்கியதனூடாக, ரயில்வே திணைக்களத்துக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 2023 ஆம் ஆண்டு சுமார் 07கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது 2023 ஆம் ஆண்டு ஸ்தாபனக்கோவைக்கு முரணாக இந்த இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 08 தொழிற்சங்கங்களுக்கு 138 (ழுpநn குசநந Pயளள) இலவச அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், 2023ஆம் ஆண்டு மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு […]

e0ae9ae0af86e0ae9fe0af8de0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0af81e0aeb3e0aeaee0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0af87e0ae9a e0ae9ae0af86e0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள்

செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

  • Dec 27, 2024 - 02:39 AM
  • 0 Comments

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. செட்டிக்குளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணிப் பிரச்சினைகள், சுகாதார வைத்திய சேவை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி, மேய்ச்சல் தரை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வருகைதந்த கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0aeaee0aebee0aea3e0aeb5e0aea9e0af8d e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1e0aebee0aeb0e0af8d | Pathivu News விளையாட்டு

வவுனியா மாணவன் வென்றார் வெள்ளி பதக்கம்

  • Dec 26, 2024 - 10:26 AM
  • 0 Comments

இளையோருக்கான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் வு.தரனிதரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் கடந்த 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இளையோருக்கான குத்துச்சண்டை போட்டி கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 மப எடைப்பிரிவில் போட்டியிட்ட தரனிதரன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 19 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)25.12.2024

  • Dec 26, 2024 - 12:26 AM
  • 0 Comments

இலங்கையுடனான உறவுக்க மிகுந்த ஆவல்- சீனா அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை பயனபடுத்தி நிதி மோசடி முறைப்பாடு ஜோசப் பரராஜசிங்கம் எம்பியின் 19ஆண்டு ஆவது நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது சீனக் கப்பலில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பார்வையிட்டார் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் https://youtu.be/W4XUO0UJt3k

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp