ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை..!
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாகக் கைவிடப்பட்டது. சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழையே இதற்குக் காரணமாகும். இதன்படி, தொடரின் முதலாவது போட்டியில் பெற்ற 41 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் 1-0 என ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பரிசோதித்த போதிலும், மைதானப் பராமரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், தலா 20 […]









