housing for care leavers | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறுவர் இல்லங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு வீட்டுத்திட்டம்..!

  • Jul 1, 2026 - 09:53 AM
  • 0 Comments

சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் , மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]

jaffna sisu seriya school bus | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச்சேவை ஆரம்பம்..!

  • Jul 1, 2026 - 09:46 AM
  • 0 Comments

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், வீதிப் பயணிகள் […]

france norway round of 16 | Pathivu News உலகம் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

பிரான்ஸ் மற்றும் நோர்வே அணிகள் இறுதி 16 சுற்றுக்குத் தகுதி..!

  • Jul 1, 2026 - 09:40 AM
  • 0 Comments

கிலியன் எம்பாப்பேயின் அதிவிசேட திறமையின் உதவியுடன், பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதி 32 அணிகள் சுற்றில் நடைபெற்ற போட்டியொன்றில் பிரான்ஸ் அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் சுவீடனைத் தோற்கடித்ததுடன், எம்பாப்பே இப்போட்டியில் இரட்டை கோல்களைப் பதிவு செய்தார். போட்டியின் முதலாவது பாதி முடிவடைவதற்கு முன்னர் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 53ஆவது நிமிடத்தில் பிராட்லி […]

china traders arrested katunayake | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிக்கிய சீன வர்த்தகர்கள்; கட்டுநாயக்கவில் அதிரடி..!

  • Jul 1, 2026 - 09:37 AM
  • 0 Comments

1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நான்கு சீன விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள “பசுமை வழி” ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே கடத்திச் செல்ல முயன்ற போதே, இன்று (01.07.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். […]

sri lanka weather today 7 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Jul 1, 2026 - 09:29 AM
  • 0 Comments

01.07.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று […]

jaffna youth canada issue | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் ; யாழ் இளைஞர்களை மீட்க முனைப்பு காட்டும் அதிகாரி..!

  • Jun 30, 2026 - 12:41 PM
  • 0 Comments

கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்று எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார மேற்கொண்டு வருகிறார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் கிளிநொச்சியைச்சேர்ந்த ஒருவரையும் கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்ற ஏஜென்சி எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்ததுடன் காணொளி எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பியிருந்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் காணொளியை பொலிசாரிடம் கையளித்ததையடுத்து.விசாரணைகளை மேற்கொண்ட வெளிநாட்டமைச்சு அதிகாரிகள் […]

imf team leaves sri lanka | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

IMF பணிக்குழாமினர் இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்..!

  • Jun 30, 2026 - 12:37 PM
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்றைய தினம் (30.06.2026) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்’ கீழ் செயல்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். மத்திய கிழக்கின் யுத்த சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதார மற்றும் […]

district planning committee | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டம்..!

  • Jun 30, 2026 - 12:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30.06.2026) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நீண்டகால மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, மயிலத்தமடு […]

suspect arrested antiquities | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் பொருட்களுடன் சந்தேக நபர் கைது..!

  • Jun 30, 2026 - 11:44 AM
  • 0 Comments

தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் பொருட்களுடன் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். புல்முடா சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த முகாமின் அதிகாரிகள் குழு ஒன்று, ஸ்ரீபுரா பொலிஸ் பிரிவு, படவி ஸ்ரீபுரா, ஜெயந்திவேவா, எண் 1872 இல் அமைந்துள்ள ஒரு வீட்டில் 29.06.2026 அன்று சோதனை நடத்தியது. தொல்பொருள் மதிப்புடையதாக சந்தேகிக்கப்படும் 01 சிறிய செப்பு நாணயம், 01 வெட்டி மெருகூட்டப்பட்ட ஒளிபுகும் கல், இரத்தினக்கல்லாக […]

meerasahibu abdul majeed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சேவையால் சரித்திரம் படைத்த சிறந்த ஆளுமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீராசாஹிபு அப்துல் மஜீட் (SSP)..!

  • Jun 30, 2026 - 11:36 AM
  • 0 Comments

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி அனுதாபம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பொத்துவில் மீராசாஹிபு அப்துல் மஜீட் (SSP) அவர்கள் காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைந்தேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னார், தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் துறையிலும், பொலிஸ் சேவையிலும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களுக்காகப் பணியாற்றிய சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சேவைகள் மக்களின் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊