pachilaipalli development meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

எட்டு மாதங்களின் பின்னர் இடம் பெற்ற பச்சிளைப்பள்ளி அபிவிருத்தி குழு கூட்டம்..!

  • Jul 3, 2026 - 01:04 PM
  • 0 Comments

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது இவ் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆனது பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் யாழ் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றது குறிப்பாக இந்த அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் இடம்பெற்றதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் இடம்பெற்றது என குறிப்பிடத்தக்கது […]

country blacklist risk | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

நாடு கறுப்புப் பட்டியலில் உள்வாங்கப்பட்டலாம்..!

  • Jul 3, 2026 - 10:35 AM
  • 0 Comments

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே புதிய திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியபோது, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்ததாவது:- “பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு பல விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், […]

44 lakh fraud arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

44 இலட்சத்தை சுருட்டியவர் கைது..!

  • Jul 3, 2026 - 10:31 AM
  • 0 Comments

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 43இலட்சத்து 86ஆயிரத்து 219 ரூபாயை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபரினால் நாற்பத்து மூன்று இலட்சத்து எண்பத்தாறாயிரத்து இருநூற்று பத்தொன்பது ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் பணத்தில் 5 இலட்சம் ரூபாய் […]

mannithalai sivan kumbabishekam | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலய கும்பாபிசேக கர்மாரம்பம்..!

  • Jul 3, 2026 - 10:25 AM
  • 0 Comments

சுதானந்த சுவாமி அவர்களது முழுமையான நிதி பங்களிப்பில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மண்ணித்தலை இராஜ இராஜேஸ்வர சிவன் திருக்கோவில். 02.07.2026

easter attack mastermind arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாராக இருந்தாலும் ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படல் வேண்டும்..!

  • Jul 3, 2026 - 09:47 AM
  • 0 Comments

ஈஸ்டர் சூத்திரதாரியைக் கைது செய்ய அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஆதரவை வழங்கும். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4156753707815548

elderly allowance from today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்..!

  • Jul 3, 2026 - 09:41 AM
  • 0 Comments

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபாய் பணம் அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sri lanka water cut today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு..!

  • Jul 3, 2026 - 09:38 AM
  • 0 Comments

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது நாளை ( 04.07.2026) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் […]

england reaches womens final | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மகளிர் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேற்றம்..!

  • Jul 3, 2026 - 09:35 AM
  • 0 Comments

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நேற்று (02.07.2026) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 170 என்ற வெற்றியிலக்கை […]

world best tourism island sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலகின் சிறந்த சுற்றுலாத் தீவாக இலங்கை..!

  • Jul 3, 2026 - 09:32 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த கிரீஸ், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் […]

sri lanka weather winds | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம்..!

  • Jul 3, 2026 - 09:29 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (03.07.2026) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊