cid statement ranil wife | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மனைவியிடம் CID வாக்குமூலம்..!

  • Apr 24, 2026 - 03:25 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24.04.2026) வாக்குமூலம் பெற்றுள்ளது. அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

jayasundara request rejected | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு..!

  • Apr 24, 2026 - 03:21 PM
  • 0 Comments

குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (24.04.2026) நிராகரித்தது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக கடமையை சரிவர நிறைவேற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் […]

teacher transfer parliament issue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வெளிமாவட்ட ஆசிரியர்களின் இடமாற்ற நிறுத்தம்; பாராளுமன்றில் குரல் கொடுப்பேன்..!

  • Apr 24, 2026 - 03:15 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுணா இராமநாதன் காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1638608350691052

johnston fernando bail | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை..!

  • Apr 24, 2026 - 03:10 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாகி இருந்தார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

nainativu protest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்…!

  • Apr 24, 2026 - 03:05 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (24.04.2026) காலை 9.30 மணியளவில் மாவிலித்துறை இறங்கு துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியது. நெடுந்தீவில் 1418 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 688 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 730 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்படாத நிலையில் சாராப்பிட்டி கிணற்று நீரையே குடிநீருக்காக நம்பி இருக்கின்றார்கள். ஆனால் அதிகளவான நீரை கடற்படையினரும் பயன்படுத்துவதால், தற்போது கிணற்று நீர் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது. போக்குவரத்து […]

velanai star gold factory | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வேலணையில் உதயமாகும் ‘Star Gold’ தொழிற்சாலை – 50 க்கும் மேற்பட்டோருக்கு உடனடித் தொழில் வாய்ப்பு..!

  • Apr 24, 2026 - 02:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. ​வேலணை நகர் வங்களாவடியை அண்மித்த பகுதியில் இந்தியத் தொழில்நுட்பத்தின் (Indian Technology) உதவியுடன் பல கோடி ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேலணைப் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்நிறுவனத்தினூடாக நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கப்பட்டுள்ளது. Star […]

ampara watermelon sales | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு..!

  • Apr 24, 2026 - 02:42 PM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இன்று இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இம் மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற […]

kalmunai cattle control issue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதில் கல்முனை மாநகர சபை மந்தநிலை..!

  • Apr 24, 2026 - 02:33 PM
  • 0 Comments

கட்டாக்காலி கால்நடைகளை கல்முனை பொதுச் சந்தையில் இருந்து கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்க்குதலில் தினமும் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் ஈடுபடுகின்றன. இதற்கமைய கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க […]

kilinochchi rural project | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்’..!

  • Apr 24, 2026 - 12:12 PM
  • 0 Comments

வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வும், சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் இன்று (24.04.2026) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆளுநர் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இலங்கையில் கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடியாகத் திகழ்கின்றது. அந்த வரிசையில் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி […]

foreigners illegal goods arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் இரு வெளிநாட்டவர்கள் கைது

  • Apr 24, 2026 - 11:42 AM
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (24.04.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான பயணிகள் இருவரும், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலுள்ள, அறிவிப்பதற்கு ஏதுமற்ற பொருட்களைக் கொண்டு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊