mushroom farming insurance scheme | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் காளான் வளர்ப்பிற்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம்..!

  • Jul 15, 2026 - 09:53 AM
  • 0 Comments

காளான் வளர்ப்பிற்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு கூடம் ஒன்றினை மூன்று மாத காலத்திற்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணம் சுமார் 2,025 ரூபாயாகும். அத்துடன், நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்கள் காரணமாக காளான் வளர்ப்பிற்கு சேதம் ஏற்பட்டால், 22,500 ரூபாய் காப்புறுதி […]

land release statement denied | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லையாம்..!

  • Jul 15, 2026 - 09:49 AM
  • 0 Comments

மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றில் கூறவில்லை. அவர் கூறிய விடயங்களை சிலர் அரசியல் தேவைகளுக்காக திரிவுபடுத்தி கூறுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பால நிர்மாணிப்புக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார், மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லை. […]

heritage journey to mannithalai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்..!

  • Jul 15, 2026 - 09:43 AM
  • 0 Comments

வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான “மரபுரிமைப் பயணம்” நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணக் கோட்டை முனீஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து, நாளைய தினம் வியாழக்கிழமை காலை 07.30 மணியளவில் பயணம் ஆரம்பமாகி , துணைவி பிரகேஸ்வரன் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம், சாவகச்சேரி வாரிவரனேஸ்வரம் மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று இறுதியாக பூநகரி மண்ணித்தலை […]

karainagar theft two arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைநகரில் தங்கி இருந்த வெளிநாட்டவர்களின் நகைகள்,பணங்கள் திருடிய குற்றத்தில் இருவர் கைது..!

  • Jul 15, 2026 - 09:40 AM
  • 0 Comments

புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரில் புலம்பெயர் குடும்பத்தினர் தங்கி இருந்த வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் தங்கியிருந்தவர்களின் 400 அமெரிக்க யூரோ மற்றும் ஒரு இலட்சம் ரூபா இலங்கை ரூபாய்க்கள் என்பனவும் களவாடப்பட்டன. சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் […]

crude oil price increase | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்தது கச்சா எண்ணெய் விலை..!

  • Jul 15, 2026 - 09:36 AM
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15.07.2026) மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 டொலராகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூன் மாத பாதியிலிருந்து பதிவான அதிகபட்ச விலை உயர்வு என்று வெளிநாட்டு […]

kataragama aadi vel festival | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று கதிர்காம கந்தனாலய ஆடிவேல் விழா கொடியேற்றம்..!

  • Jul 15, 2026 - 09:33 AM
  • 0 Comments

2026ம் ஆண்டுக்கான கதிர்காம கந்தனாலய ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கொடியேற்றம் இன்று(15.07.2026) புதன்கிழமை மாலை 4 மணியளவில் பால்குடி பாவா பள்ளிவாசலில் நடைபெறும். இன்று இரவு முதல் நாள் திருவிழா பெரஹரா நடைபெறும். தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா பெரஹரா இடம்பெற்று கந்தனின் தீர்தோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை மாணிக்கங்கையில் இடம்பெறும். இதேவேளை கடந்த 10 ஆம் திகதி திறந்த காட்டுப் பாதை 15 தினங்கள் பக்தர்களுக்கு திறந்திருக்கும். இதுவரை சுமார் 30 […]

today sri lanka weather | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Jul 15, 2026 - 09:28 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேவேளை, முல்லைத்தீவு, […]

cause of escalated negombo prison clash | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் தீவிரமடைந்தமைக்கான காரணம்..!

  • Jul 14, 2026 - 04:17 PM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் இவ்வளவு தூரம் தீவிரமடைந்ததற்குக் காரணம், கைதிகள் மீது வைக்கப்பட்டிருந்த அதீத நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், ‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டார். “ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் உயிரிழக்கின்றனர். அது அதிகாரிகளுக்குப் பரவியிருக்கவில்லை. மறுநாள் காலையில் எமது அதிகாரிகள் […]

saleys petition hearing postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சலேயின் மனு பரிசீலனை ஒத்திவைப்பு..!

  • Jul 14, 2026 - 04:14 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிக பரிசீலனைக்காக இந்த மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பிப்புகளை […]

warning over strong winds and rough seas | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை..!

  • Jul 14, 2026 - 04:11 PM
  • 0 Comments

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊