சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச்சுகாதார வசதிகளை உள்ளூராட்சி மன்றங்கள் கவனிக்கவேண்டும்..!
வடக்கு மாகாணத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் நகரப் பகுதிகளிலும் அமைந்துள்ள பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகள், இங்குள்ள பொதுச் சுகாதார வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் எமது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். […]









