e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0af88e0aeaae0aebee0aea4e0af88 e0ae95e0ae9fe0af88e0ae95 | Pathivu News உள்ளூர்

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு!

  • Dec 9, 2024 - 06:59 AM
  • 0 Comments

வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை 10 ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன், அந்த தினத்தில் அகற்றப்படாது விட்டால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் […]

e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeaf e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ae0ae95e0af8de0aea4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d 2 | Pathivu News செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விவகாரம் இழுபறியில் உள்ளது- அமைப்பாளர்

  • Dec 9, 2024 - 06:44 AM
  • 0 Comments

கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட்டால் மட்டுமே ;கத்துடன் போட்டியிட முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்கு வீதத்துக்கு அமைய ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் மாத்திரம் குறிப்பிடப்பட்;டதுமிகுதி தேசிய பட்டியல் […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0aeb2 e0ae87e0ae9fe0ae99e0af8de0ae95e0aeb3e0af88 e0aeaa | Pathivu News செய்திகள்

வவுனியாவின் பல இடங்களை பொலிஸார் சுற்றிவளைத்து பலர் மீது வழக்குப் பதிவு

  • Dec 8, 2024 - 07:36 PM
  • 0 Comments

வவுனியா நகரம் மற்றும் நகரை அண்மித்த சில பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. பருவ மழை மற்றும் சீரற்ற காலநிலையால் பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா பொலிஸார் இன்று (08) திடீர் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0aea9e0aebfe0aea4 e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0ae95e0aeb3e0af8d | Pathivu News செய்திகள்

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மிகவும் அக்கறையுடன் செயலாற்றுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

  • Dec 8, 2024 - 07:27 AM
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார். பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியை அடுத்து, புதிய பிரதமராகத் தெரிவான கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத்தெரிவித்து பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஜுலை மாதம் 5 ஆம் […]

e0aea8e0af80e0aea3e0af8de0ae9f e0ae95e0aebee0aeb2e0aeaee0aebee0ae95 e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0aebe | Pathivu News செய்திகள்

நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது

  • Dec 7, 2024 - 06:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. குறித்த சம்பவங்கள் […]

e0aeb5e0aea9e0af8de0aea9e0aebf e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4 3 | Pathivu News உள்ளூர்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 ஆயிரம் வாக்குகளால் தப்பி பிழைத்த ரெலோவின் கலந்துரையாடல்!

  • Dec 7, 2024 - 02:00 PM
  • 0 Comments

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் கலந்துக்கொள்வதாக தெரியவருகின்றது அத்துடன் ரணில் ஆதரவு அணி வினோநோகராதலிங்கமும் கலந்துக்கொண்டுள்ளாராம் டெலோவின் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத ;தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்இடம்பெற்றுவருகின்றது. ரெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள், தொடர்பாக பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது கலந்துரையாடலில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன்கனகரத்தினம்,பிரசன்னா இந்திரகுமார்,செ.மயூரன் , பேச்சாளர் சுரேன் […]

e0aeaee0aebee0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88 e0aeaee0aebee0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0ae8ee0aea9 | Pathivu News உள்ளூர் செய்திகள்

மாவீரர்களை மாவீரர்கள் என பாராளுமன்றத்தில் சொல்லப்பயந்த எம்.பி.

  • Dec 7, 2024 - 12:57 PM
  • 0 Comments

இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என மேதகுவிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்கே? மாவீரர்களை இறந்தவர்கள் என விழித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எங்கே? ஆனால் இருவரும் வைத்தியர்களே.   இதையும் படியுங்கள்>நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது https://www.youtube.com/watch?v=I9vE6Q6IR08

e0ae85e0aea8e0af81e0aeb0 e0ae85e0aeb0e0ae9ae0aeaee0af8d e0aeaee0aebee0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8d e0aeb5e0aebee0aeb0e0aeaee0af8d | Pathivu News செய்திகள்

அநுர அரசம் மாவீரர் வாரம் தொடர்பில் இப்போது கெடுபிடி

  • Dec 7, 2024 - 12:03 PM
  • 0 Comments

மாவீரர் வாரம் நினைவேந்திய 12 பேரிடம் யாழில் விசாரனைகள் ஆரம்பம் யாழ்ப்பாணத்தில் மாவீரர் வாரத்தினை நினைவேந்தியமை தொடர்பில் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகிறது. மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பில் நேற்று (06) இரு இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டன. மாவீரர் நாள் குறித்து முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது […]

e0aeaee0aea3e0af8de0ae9fe0af88e0aeafe0aebfe0aeb2e0aebfe0aeb0e0af81e0aea8e0af8de0aea4 e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0af88e0aeafe0af88 | Pathivu News செய்திகள்

மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல

  • Dec 6, 2024 - 06:04 PM
  • 0 Comments

சபாநாயகர் அசோகரன்வல ஒரு பட்டதாரி என்பதை அவர் நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்மையான அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகிந்த தேசப்பிரிய இவ்வாறு சொன்னதால் தற்போதைய சபாநாயகர் அசோகரன்வல ஓல். எல் தாண்டவில்லையா என மக்கள் […]

e0aeb8e0af8de0aeaae0af86e0aeafe0aebfe0aea9e0af8d e0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8d e0aeaae0af86e0aea3e0af8d e0ae9a | Pathivu News செய்திகள்

ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல்

  • Dec 6, 2024 - 05:53 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடரூந்தில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை தடியால் தாக்கிவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக கூறப்படும் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர், இரு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டபோதுஇருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல மற்றும் விக்டன் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுகளை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp