sri lanka rain today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல பகுதிகளில் இன்றும் மழை..!

  • Aug 11, 2026 - 09:41 AM
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் […]

promises to release lands repeated for two years but no action taken | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணிகளை விடுவிப்போம்” என ஒரே பல்லவியை இரண்டு வருடமாக பாடுகிறார்கள் தவிர காணிகளை விடுவிக்கவில்லை..!

  • Aug 10, 2026 - 12:36 PM
  • 0 Comments

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் , ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

one journey towards tamil eelam | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழீழத்தை நோக்கி ஒரே பயணத்தில் போவோம்..!

  • Aug 10, 2026 - 11:53 AM
  • 0 Comments

கனடாவில் இன்றைய தினம்(09.08.2026) இடம்பெற்ற தமிழர் நாள் விழாவில் ஒன்ராறியோ மாகாணத்தின் மனநலம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தன்மைக்கான இணை அமைச்சர் விஜய் தணிகாசலத்தின் அனல் பறக்கும் பேச்சு. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/27122106044131078  

slpp general secretary sagara kariyawasam arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது..!

  • Aug 10, 2026 - 11:47 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10.08.2026) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tense incident in cinnamon gardens | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சினமன் கார்டன் பகுதியில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்..!

  • Aug 10, 2026 - 11:26 AM
  • 0 Comments

குடும்பத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பியோடிய சாரதி நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை ஒரு முச்சக்கர வண்டி சாரதி மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த வாகனத்தை துரத்திச் சென்று, வழி மறித்து வாகனத்தை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2837433126624952

24 hour red alert issued | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

  • Aug 10, 2026 - 10:16 AM
  • 0 Comments

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10.08.2026) மு.ப 07.00 மணி முதல் நாளை (11.08.2026) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் […]

veteran journalist arumugam sabeswarans funeral held in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழில்..!

  • Aug 10, 2026 - 10:14 AM
  • 0 Comments

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார் அவரது […]

sand mafia complaint filed against pradeshiya sabha member | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மணல் மாபியாக்களால் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!

  • Aug 10, 2026 - 09:52 AM
  • 0 Comments

தனது காணியினில் குவித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான மணலை புகைப்படம் எடுத்ததாக பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக காணி உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து நேற்றைய தினம் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மயூரன் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார் அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட. கெற்பெலி பகுதியில் அதிகளவான கட்டுமான மண்ணினை தனி நபர் ஒருவர் ஏற்றுவதாக பிரதேச மக்கள் மற்றும் சமுகமட்ட அமைப்பினர் கெற்பெலி […]

grama niladharis launch trade union action | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள்..!

  • Aug 10, 2026 - 09:43 AM
  • 0 Comments

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10.08.2026) நாளையும் (11.08.2026) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 2024 ஆம் […]

gce advanced level exam begins today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்..!

  • Aug 10, 2026 - 09:40 AM
  • 0 Comments

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10.08.2026) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். மேலும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊