mahinda bribery probe | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்..!

  • May 12, 2026 - 10:44 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு அங்கு முன்னிலையாகியுள்ளார். முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 reservoir spill gates | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பிரதான 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு..!

  • May 12, 2026 - 10:35 AM
  • 0 Comments

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில, லுணுகம்வெஹெர, வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் மாகல்ல, தெதுறு ஓயா நீர்த்தேக்கம் மற்றும் கண்டி மாவட்டத்தின் வாமெடில்ல, நாலந்த நீர்த்தேக்கங்களும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஆர நீர்த்தேக்கமும் இவ்வாறு வான்பாய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கலா […]

sl weather today 11 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • May 12, 2026 - 10:25 AM
  • 0 Comments

12.05.2026 இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் […]

oil price rise | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை..!

  • May 11, 2026 - 10:39 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன்படாததே, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.1 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.51 டொலராகவும் பதிவாகியுள்ளது. […]

landslide alert 5 districts | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

  • May 11, 2026 - 10:33 AM
  • 0 Comments

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (11.05.2026) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: பதுளை மாவட்டம்: பசறை குருநாகல் மாவட்டம்: ரிதிகம மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை மொனராகலை மாவட்டம்: […]

yaazh devi service | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் தேவி தொடரூந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..!

  • May 11, 2026 - 10:06 AM
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான யாழ் தேவி (Yal Devi) ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பயண விபரங்கள்: இலங்கை புகையிரத சேவையின் அறிவிப்பின்படி, யாழ் தேவி புகையிரதத்தின் பயண நாட்கள் மற்றும் ஒழுங்குகள் வருமாறு: கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம்/காங்கேசன்துறை நோக்கி: திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும். யாழ்ப்பாணம்/காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி: செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்கும். வடக்கு ரயில் பாதையில் […]

mannar sand permits cancelled | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான உரிமங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து..!

  • May 11, 2026 - 09:57 AM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களுக்கு இடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10.05.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மணல் அகழ்வு உரிமங்களை வழங்குவது புதிய விதிமுறைகளின் கீழ் […]

samara arrives sl | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘படுவத்தே சாமர’..!

  • May 11, 2026 - 09:39 AM
  • 0 Comments

அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான மனோஜ் சுரங்க அல்லது ‘படுவத்தே சாமர’ என்பவர் நேற்று(10.05.2026) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சந்தேகநபர் இந்தியா ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரை அழைத்து வருவதற்காக இலங்கைப் பொலிஸ் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

overflowing reservoirs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வான்பாயும் 12 நீர்த்தேக்கங்கள்..!

  • May 11, 2026 - 09:32 AM
  • 0 Comments

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜங்கனை, பதுளை மாவட்டத்தின் சொரபொர வாவி, கண்டி மாவட்டத்தின் வே மெடில்ல நீர்த்தேக்கம், தேவஹூவ, நாலந்த, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, யோத எல, […]

electricity tariff revision | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று முதல் அமுல் ஆகும் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம்..!

  • May 11, 2026 - 09:26 AM
  • 0 Comments

ந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11.05.2026) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது மின்சாரக் கட்டணங்களை 8% முதல் 14.4% வரையிலான சதவீதத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான பின்னணியில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்திக்கான செலவு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊