உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (11.05.2026) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: பசறை

குருநாகல் மாவட்டம்: ரிதிகம

மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை

மொனராகலை மாவட்டம்: படல்கும்புர மற்றும் வெல்லவாய

இரத்தினபுரி மாவட்டம்: கொடகவெல

முதலாம் கட்டத்தின் கீழ் (நிலை 1) அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை